திருக்குறள்

1175.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக் காமநோய் செய்தவென் கண்.

திருக்குறள் 1175

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக் காமநோய் செய்தவென் கண்.

பொருள்:

கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

மு.வரததாசனார் உரை:

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

சாலமன் பாப்பையா உரை:

கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.